கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
![]()
கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் கள்ளசாராயம் மற்றும் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி இன்று. கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தாரணேஸ்வரி தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது சின்ன திருப்பதி கிராமம் தெங்கியநத்தம் ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 46 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 9,200 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் லாரி டியூபில் சுமார் 685 லிட்டர் சாராயம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட வெங்கடேசன் த/பெ சந்திரன் மற்றும் பொன்னுவேல் த/பெ பெருமாள் அகியோரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

