வேலூரில் காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக அறப்போராட்டம்.

Loading

வேலூரில் காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக அறப்போராட்டம்.
வேலூர் மாநகர் அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் டிகாராமன், தலைமையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்யா கிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் எஸ் சி எஸ் டி மாநில பொதுச் செயலாளர் சித்ராஞ்சன், மாவட்ட மகளிர் அணி தலைவி வசந்த பிரியா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், கப்பல் மணி, ரகு, வாஹித் பாஷா, இளங்கோ, ஹரிகிருஷ்ணன், பாலச்சந்தர், ஜெகநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சத்யா கிரக அறவழிப்  போராட்டம் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது.இந்தப்போராட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *