உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று 25 கிலோ லட்டு வழங்கி கொண்டாட்டம்.
பாலக்கோட்டில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று 25 கிலோ லட்டு வழங்கி கொண்டாட்டம்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக நகர கழகம் சார்பில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நகர செயலாளர் ராஜா தலைமையில் 25 கிலோ லட்டு வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதையடுத்து பஸ் நிலையத்தின் முன்பு உள்ள புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி,எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாணவர் அணி செயலாளர் முருகேசன்,முன்னாள் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, நகர இணை செயலாளர் இலட்சுமிகொளந்தை, முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கிரிநாத், சோமேஷ், புஷ்பராஜ், மோகன்ராஜ், கார்த்திக், நவீன், பரத், நந்தகுமார், கவுன்சிலர் குருமணி,கிளை கழக செயலாளர்கள் , மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள்,ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், சுமைதூக்குவோர் சங்க தொழிலாளர்கள் , கட்டுமான தொழிலாளர்கள் , தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் , பாலக்கோடு 18 வார்டு கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.