கல்வி குருப்ஸ் ஆப் ஸ்கூல்ஸ் சார்பில் ஜுனியர் அத்லெட்டிக் போட்டி

Loading

மதுரையில் கல்வி பள்ளி குழுமத்தின் முதலாம் ஆண்டு ஜீனியர் அத்லெட்டிக் போட்டி எம்ஜிஆர் ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது, பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர், கல்வி குழுமத்தின் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அனுஷாவின் பரதநாட்டியம் நடைபெற்றது, மாணவியை பாராட்டி தல்லாகுளம் காவல் ஆய்வாளர் எஸ்தர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார், நிகழ்ச்சியில் கல்வி குழும தாளாளர் முருகேசன், சேர்மன் செந்தில் குமார், சோலைமலை குரூப்ஸ் நிறுவனத் தலைவர் நாகராஜ், அனுஷ் டைல்ஸ் நிறுவனர் காளிமுத்து, வாய்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், போட்டி இறுதியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

0Shares

Leave a Reply