பாஜக பெண் நிர்வாகிகளை கண்ணிய குறைவாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…

Loading

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளரும் திமுகவின் நிர்வாகியுமாக சைதை சாதிக் பதவி வகித்து வருகிறார்.. இவர் கடந்த வாரம் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பூ காயத்ரி ரகுராம் கௌதமி நமிதா உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்தும் கண்ணிய குறைவாகவும் மேடையில் பேசினார்…
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டன குரல்களை தெரிவித்து வரும் சூழலில் திமுக நிர்வாகிகள் பெண்களை இழிவாக பேசுவது தவறு எனவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு குரலை பதிவிட்டு வருகின்றனர்..இருப்பினும் இது நாள் வரை சைதை சாதிக் கைது செய்யப்படவில்லை..
இந்த நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பாக திமுக நட்சத்திர பேச்சாளர் சைதை சாதிக்கை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரிவின் தலைவர் சி பி சக்கரவர்த்தியின் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது…
இந்நிகழ்வில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சௌந்தரம் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாவட்டத் தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேஷ் குமார், செயலாளர்கள் ஏக மூர்த்தி மனோகரன் சரவணன் சின்னச்சாமி மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம் ஐயப்பன் கிருஷ்ணவேணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்..
0Shares

Leave a Reply