நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் அவர்கள்  5 வது முறையாக பதவியேற்பு

Loading

நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் அவர்கள்  5 வது முறையாக பதவியேற்பு,
 கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாராட்டு:
               குன்னூர் நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக பா.மு.முபாரக்கை கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களுக்கு,
குன்னூர் நகர திமுக சார்பில்  குன்னூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகில் நகர திமுக செயலாளரும்,
 நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி அவர்கள்  தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
5 –   வது முறையாக மாவட்ட செயலாளராக பா.மு.முபாரக் அவர்கள் பொறுப்பேற்று கொண்டு குன்னூர் பேருந்து நிலையத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
மாவட்ட செயலாளருக்கு குன்னூர் நகர திமுக செயலாளர் ராமசாமி மாலை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
 இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொது குழு உறுப்பினர் சதக்கதுல்லா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷிலாகேத்ரின்,  நகர்மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா,நகர திமுக துணை செயலாளர் முருகேஷ் நகர பொருளாளர் ஜெகநாத்ராவ் குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்,
24 நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்கள்  தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply