தருமபுரியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் போக்குவரத்து தொழிற்ச்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

ஊழலற்ற ஆட்சி என்று சொல்லும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கொள்கைக்கு எதிராக ஆளும் தொழிற்ச்சங்க நிர்வாகிகள் செய்யும் தொழிலாளர்களின் விரோத போக்குக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்தும்,வழித்தட பேரூந்து பணிக்கு கிளை தோறும் தொழிலாளர்களிடம் பல இலட்சம் வசூல் வேட்டை நடத்தும் போக்கை கண்டித்தும்,வழித்தட பேரூந்து பணிக்கு ஓட்டுனர் நடத்துனர்களின் சீனியாரிட்டி படி சுழற்சி முறையில் பணி செய்ய வேண்டும்,என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி நகர போக்குவரத்து பணிமணை முன்பு மண்டல பொது செயலாளர் மாது அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஞானசேகரன் மாதவன்,பழனிசாமி,சக்திவேல்,இளையக்குமார்,சண்முகம்,சேட்டு,விமேஸ்வரன்,காவேரிவர்மா,வரதராஜன்,கிருஷ்ணன்,பாலன்,சின்னதுரை,சக்திவேல்,பழனிசாமி,ஆகியோர் உட்பட பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply