திட்டப் பணிகளுக்கு ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் கிராமச்சந்தை வளாகக் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி ஆய்வு

Loading

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு
ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் கிராமச்சந்தை வளாகக் கட்டிட பணிகள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில்
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப் பணிகளில் முதலாவதாக இடையமேலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ 41 இலட்சம் மதிப்பீட்டில் கிராமச்சந்தை வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பொதுமக்கள் நாள்தோறும் வந்து பயன்பெறக்கூடிய வகையில் உள்ளதால் போதிய அளவு உள் கட்டமைப்பு வசதிகளுடன் பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரூ 5.40 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் பலன்தரும் பல்வேறுவகையான மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரிக்கப்பட்டுவருவதைப் பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து, ஊராட்சிக்கு வருவாய் வரும்வகையில் நன்முறையில் பயன்படுத்திட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

அதன்பின்னர் தமறாக்கி சாலையில் ரூபாய் 4.60 இலட்சம் மதிப்பீட்டில் இடையமேலூர் பாசன கண்மாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை பார்வையிட்டு தடுப்பணைக்கு தண்ணீர் வரத்துக்கால்வாய் சீர்செய்து எப்பொழுதும் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றும் அப்பொழுதுதான் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் கண்மாய்க்கு வருவதுடன் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் விளைநிலப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒத்தப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தை பார்வையிட்டு அங்குள்ள பள்ளிக் கட்டிடங்களை நடப்பு நிதி ஆண்டில் புதுப்பித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் அழகமாநகரி ஊராட்சியில் ரூ 23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுவருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியதுடன் தொடர்ந்து அழகமாநகரி
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அதிக அளவு நிழல்தரும் மரங்களை நடவுசெய்து பராமரிக்க வேண்டுமென பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர் செல்வராஜ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெத்தினவேல், அன்புச்செல்வி,
உதவிப் பொறியாளர் கார்த்தியாயினி மற்றும் துறைசார் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Attachments area

0Shares

Leave a Reply