இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகும். கடுமையான எதிர்பார்ப்புகள் கூட திடீரெனச் சாதகமாகிவிடும். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த நபர் இல்லம் தேடி வரலாம்.

ரிஷபம்

உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிக்குப் பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு.

மிதுனம்

காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய வியாபாரம் வளர்ச்சியைக் கொடுக்கும்.

கடகம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.

சிம்மம்

வெற்றிக்கு அடித்தளம் அமையும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். இழுபறியான வழக்கில் வெற்றி கிட்டும்.

கன்னி

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். இழுபறியான வழக்கில் வெற்றி கிட்டும்.

துலாம்

லாபகரமான நாள். உறவினர்களின் அன்பிற்குப் பாத்திரமாவீர்கள். முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

விருச்சகம்

வருமானம் இருமடங்காகும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகளுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு

சுபவிரயம் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. மறக்க முடியாத சம்பவமொன்று மாலை நேரத்தில் நடைபெறும். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மகரம்

பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெறும் நாள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கிச் சேமிப்பு உயரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.

கும்பம்

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் யோகம் உண்டு. வருமானம் போதுமானதமாக இருக்கும்.

மீனம்

குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. எதிர்பாராத வருமானம் உண்டு. பயணங்களால் அலைச்சல் கூடும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *