சாமல்பட்டி அருகே பட்டப்பகலில் மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட .கே.எட்டிபட்டி கதிரம்பட்டி கிராமத்தில் இன்று காலை சுமார் பதினொரு மணி அளவில் கிராமத்தில் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
சங்கர் பெருமா என்பவரின் வீட்டில் 110000 பணமும்   கோவிந்தன் பரிமளா  என்பவரின் வீட்டில் 10000 ரூபாயும்,மேலும்  இந்துமணி  என்பவரின் வீட்டில் 1900 ரூபாயும்  3 பவுன்  தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர்.
 கல்லாவி காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் சாமல்பட்டி காவல்துறையினர் மற்றும் ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் உட்பட காவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares

Leave a Reply