45 நிமிடங்களில் 8500 முறை ஸ்கிப்பிங்.* _சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற காரைக்குடி மாணவன். _
![]()
காரைக்குடி ஆகஸ்ட் 18.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் கபிலேஸ்வரன். இவர் நேற்று காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 45 நிமிடங்களில் 8500 முறை ஸ்கிப்பிங் செய்து சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். அப்போது மாணவனுக்கு சோழன் சாதனைப் புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் சுரேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழுத் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் மாணவனின் சாதனையைப் பாராட்டி *சாண்டல் பட்டய* விருது வழங்கி சிறப்பித்தனர்.
மருத்துவர் சுரேந்திரன் மாணவனுக்கு 5001 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கிப் பாராட்டினார்.

