Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021

சென்னை:
பிலவ வருடம் ஆடி 09 ஆம் தேதி ஜூலை 25,2021 ஞாயிற்றுக்கிழமை. துவிதியைத் திதி விடிகாலை 04.04 மணி வரை அதன் பின் திருதியை. திருஓணம் பகல் 11.17 மணி வரை அதன் பின் அவிட்டம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வீட்டில் திடீர் சுப காரியங்கள் நடைபெறும்.

ரிஷபம் சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வருமானம் வரும்.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வருமானம் வரும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பெண்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளுக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் ஏற்படும். வீடு, சொத்து வாங்க முயற்சி செய்யலாம்.

தனுசு
சந்திரன் இன்று தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில வேலைபளு கூடும். வியாபாரத்தில் சிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை நீங்கும். குடும்ப விசயத்தில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். நல்ல காரியங்கள் விசயமாக இன்று பேசலாம். பேச்சிலும் செயலிலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். திடீர் பண வருமானம் வரும் வங்கி சேமிப்பு உயரும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *