Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை ஜூன் 08, 2021 சென்னை
Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை ஜூன் 08, 2021 சென்னை: பிலவ வருடம் வைகாசி 25ஆம் தேதி ஜூன் 8,2021 செவ்வாய்க்கிழமை. திரயோதசி திதி பகல் 11.24 அதன் பின் சதுர்த்தசி திதி. கிருத்திகை முழுநாள். சந்திரன் இன்றைய தினம் மேஷம், ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். \”ஹலோ சி.ஆர்.எஸ்\”.. வளர்மதி கூப்பிட.. சரஸ்வதி சிரிக்க.. திருவல்லிக்கேணியில் திடீர் திருப்பம்!
ரிஷபம்
பிற்பகலுக்கு மேல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தமிழ் மட்டுமல்ல.. 8ஆம் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்
மிதுனம்
விரைய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரம், உதவிக் கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்
கடகம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போவதால் உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். புகழ், கௌரவம் கூடும் நாள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
சிம்மம்
சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவு வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் சாதித்துக் காட்டும் நாள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கன்னி
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிற்பகல் வரை சில பண விசயங்களில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். தொழில் உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.
துலாம்
இன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்த்து விடவும். குடும்பத்தில் உள்ள அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். விருச்சிகம் இன்றைய தினம் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நாள். சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேல் அதிகாரி உங்களை மதிப்பார்.
தனுசு
இன்றைய தினம் திடீர் பண வரவு வரும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொந்தபந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மகரம்
சந்திரன் சாதகமான இடத்தில் பயணத்தை தொடங்குகிறார். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். பிள்ளைகளில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம்
இன்றைய தினம் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடிவசூலிப்பீர்கள். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் இரட்டை லாபம் உண்டு. உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வெற்றி தேடி வரும் நாள்.