கல்குவாரியை தடை செய்யக்கோரி கலெக்டரிடம் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்……..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா செப்டாங்குளம் கிராமமக்கள் திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் செப்டாங்குளம் மற்றும்ந ம்பேடு கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் 3-வதாக ஒரு கல்குவாரியை அமைக்க 3பேர் திட்டமிட்டு கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல்
நிரந்தரமாக கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும்.
ஏற்கனவே வடுகமங்கலம் மற்றும் செப்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மிகப்பெரிய கல் குவாரி இயங்கி வருவதால் இயற்கை வளம் இழந்து நாங்கள் மிகப்பெரிய அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் எங்களது கிராமத்தில் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள் . மேலும் விவசாயம் செய்யும் இடத்திலேயே 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதன் அருகாமையில் 10அடி தொலைவில் அரசின் சமூக பாதுகாப்பு காடுகள் உள்ளது. இதன் அருகாமையில்
200 மீட்டர்தொலைவில் மக்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய பழமை வாய்ந்த குளம் உள்ளது. மேலும் இதன் அருகாமையில்1/2 கிலோ மீட்டர் தொலைவில் வடுக மங்கலம் கிராமத் திற்கு உட்பட்ட செப்டாங்குளம்மற்றும் நம்பேடு ஊராட்சிக்கு அருகில் ஒரு கல் குவாரி உள்ளது. 2வதாக செப்டாங்குளம் ஊராட்சியில் மிகப்பெரிய அளவில் ஒரு கல் குவாரி உள்ளது. இவ்விரு கல் குவாரிகளால் மிகப்பெரிய அளவில் தற்போது வரை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நம்பேடு கிராம சர்வே எண். 179 என்ற எண்ணில் கல் குவாரி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர் இதனை தடை செய்யக்கோரி 27. 1. 2020. அன்று கிராம பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இதை சம்பந்தமாக ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுத்தும். மாவட்ட ஆட்சியர் எங்களது புகாரின் பேரில் சிறப்பான முறையில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்தார் தற்போது மாவட்ட ஆட்சியர் தற்போது இடமாற்றம் செய்ததால் பின்னர் புது ஆட்சியரிடம் கல் குவாரி அமைக்க மனு கொடுத்து உள்ளார்கள் அவர்களது மனுவை தடை செய்ய வேண்டும் என்று மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அதில் வாழ்வாதாரத்தை நம் படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்