கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை விழிப்புணர்வு

Loading

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 
கோவை செம்மொழிப் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது இதில், பிங்க் வண்ணத்தில் பூங்கா காட்சியளித்தது. 
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் முழுமையாக குணப்படுத்தலாம். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறக்கின்றனர். ஆனால், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் 90% மார்பக புற்றுநோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது ஒரு நல்ல செய்தியாகும்.
கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கேஎம்சிஹெச், புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் பொதுமக்களிடையே,குறிப்பாக பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்காவில் சிறப்பு விழ்ப்புணர்வு நிகழ்ச்சிக்கும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் கையெழுத்து இயக்கத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தது. இதனை
கோவை மாநகராட்சி துணை ஆணையர் சரஸ்வதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும், நோயை வெல்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கொண்டாடவும், முக்கிய பிரமுகர்களுடன் மருத்துவமனை மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி “மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான நமது வலிமையான ஆயுதம் அதை ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான். இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து கையேழுத்திட்டார் தொடர்ந்து எங்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வு முயற்சிகள் மூலம், இந்நோய் குறித்த பயத்தைப் போக்கி, ஒவ்வொரு பெண்ணும் வழக்கமான பரிசோதனைகளுக்கும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று கூறினார்
0Shares