அடிப்படை வசதி ஆட்சியரிடம் இலங்கை தமிழர்மனு

Loading

அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் மனு
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு அண்மையில் புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இருப்பினும், அப்பகுதியில் சாலை வசதி, வடிகால் (டிரைனேஜ்) வசதி மற்றும் குடிநீர்த் தொட்டி உள்ளிட்ட எவ்வித அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் வாடகை வீடுகளில் வசிக்க முடியாமலும், முதியோர்களுடன் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கும் முகாம் மக்கள், தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பொதுப்பணித்துறை (PWD) தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மிக விரைவாக பூர்த்தி செய்து தர வேண்டும் என முகாம் சார்பில் அருண் பிரிட்டோ செய்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0Shares