நிகில் சிவானந்தன் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
![]()
ஈரோடு மாவட்ட அளவில் ஆகாஷ் மைய மாணவர் நிகில் சிவானந்தன் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு பெருந்துறை சாலை வீரப்பம்பாளையத்தில் உள்ள ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்ற மாணவர் நிகில் சிவானந்தன், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET-UG) 720 மதிப்பெண்களுக்கு 691 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இந்திய தரவரிசையில் 92-வது இடத்தைப் பிடித்துள்ள இவர், ஈரோடு மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்று மையத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இச்சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாணவர் நிகில் சிவானந்தன், அகில இந்திய அளவில் சிறந்த தரவரிசையைப் பெற்றதன் மூலம் தனது மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே மையத்தில் பயின்ற மற்ற மாணவர்களான
ஆதியன் 647 மதிப்பெண்களும் (தரவரிசை: 1649), ஆராதனா விக்னேஷ் 645 மதிப்பெண்களும் (தரவரிசை: 1808), தீஸ்னா 590 மதிப்பெண்களும் (தரவரிசை: 13726), அபிநவ் 587 மதிப்பெண்களும் (தரவரிசை: 14919) பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில், ஆகாஷ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் சிறப்பான தரவரிசைகளைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 மாணவர்களும், முதல் 50 இடங்களுக்குள் 20 மாணவர்களும், முதல் 100 இடங்களுக்குள் 56 மாணவர்களும் தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
கடந்த 37 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஆகாஷ் நிறுவனம், நாடு முழுவதும் 425-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நீட், ஜே.இ.இ, என்.டி.எஸ்.இ மற்றும் ஒலிம்பியாட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாக நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல விற்பனை தலைமை அதிகாரி பிரதீப் உன்னிகிருஷ்ணன் மற்றும் முதன்மை உதவி இயக்குநர் ராகவேந்திரா ஆகியோர் தெரிவித்தனர். இந்தச் சாதனை விளக்கத்தின் போது ஈரோடு கிளை மேலாளர் கோபிநாத் மற்றும் மைய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

