கோவையில் திமுகவில் இருந்து விலகிய கவுன்சிலர்

Loading

இளைஞர்களுக்கும் இடமில்லை, திமுகவில் எளியவர்களுக்கும் இடமில்லை என்ற சிந்நாந்தத்தை திமுக கடைபிடித்து வருவதால், திமுகவுடன் இனி பயணிக்க முடியாது என்று அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக திமுக கவுன்சிலர் கோவை பாபு பரபரப்பு பேட்டி..
தனது குடும்பம் என்கிற வட்டத்திற்கு அப்பாற்பட்டு இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்ற பணிகளை செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு கடந்த 2020 ஆம் ஆண்டில், திராவிடன் எனும் அறக்கட்டளையை தொடங்கி கல்வி, சமூகம் சார்ந்த அறப்பணிகளை செய்து வந்தவர் கோவை பாபு. தனது பொது பணிகளை இன்னும், விரிவாக செய்யலாம் என்கின்ற எண்ணத்தோடும், ஆசையோடும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, பணியாற்ற விரும்பி கட்சியில் இணைந்துள்ளார். இவருக்கு திமுக அயலக அணி, கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் என்ற பொறுப்பை திமுக அரசு வழங்கியதுடன், நடைபெற்று நிறைவு பெற்ற கவுன்சிலர் தேர்தலில், வார்டு எண் 22ல், வெற்றி பெற்று தற்போது வரை திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் இன்று கோவை சரவணம்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.. கொள்கை உறுதியும், ஏழை எளிய, குடும்ப பின்னணியும், கொண்ட சாமானிய இளைஞர்களால், மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் திமுக, ஆனால் இன்றைய திமுகவில் அந்த நிலை இல்லை, இப்பொழுது இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம், சாமானியர்களின் கட்சியாக இல்லை எனவும், அது ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறியிருக்கிறது எனவும், இங்கே சாமானியன் ஒருவன் வெறும் வாக்காளனாகவோ, அல்லது கட்சியின் அடிப்படை தொண்டனாகவோ இருக்கலாமே தவிர, எந்த ஒரு காலத்திலும் உண்மையான மக்கள் தொண்டாற்றவோ, பொறுப்புகளுக்கோ, உயர் பதவிகளுக்கோ வர முடியாது என்கின்ற நிலையை கட்சி மேலிடம் நிர்பந்து வருகின்றது என தெரிவித்தார். மேலும் தான் ஒரு வார்டு கவுன்சிலர், மாவட்ட அளவில் கட்சியின் அயலக அணி செயலாளர் ஆனால், எனக்காக தேர்தல் பணியாற்றியவர்களுக்கு, என்னை நம்பி திமுகவில் சேர்ந்து, கட்சி பணி செய்கிறவர்களுக்கு கூட, இந்த கவுன்சிலர் பதவியும் கட்சிப் பதவியும் வைத்து, ஒரு வீட்டு வரி ரசீதை கூட கட்சிநிதி இல்லாமல் செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். இதற்கு மேலும் இந்த கட்சியில் நான் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி வருகின்றது. எனவே இக்கட்சியில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்தார். திமுக தலைமை, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நிர்ணயித்த பிறகு கோவை மாவட்டத்தில் திமுக கட்சி கரூர் கம்பெனியாகவே மாறிப்போனது எனவும், கட்சியின் நிர்வாகிகள், அனைவரும் செந்தில் பாலாஜி கம்பெனியின் வேலைக்காரர்களாக வேலை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே விரைவில் தனது அரசியல் குறித்த அடுத்த கட்ட நகர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், தற்பொழுது வரை தான் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர், துவங்கப்பட்டு தற்போது, ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, அனைத்து ஊழல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றது, இது தனக்கு மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும், நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எண்ணினேனோ அதை, தவெக தலைமை அரசு செய்து வருகின்றதாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares