சொகுசுகாரில் கால்நடைகளைகடத்தி செல்லும்கும்பல்

Loading

திருவள்ளூரில் ஸ்கார்பியோ சொகுசு காரில்  கால்நடைகளை கடத்தி செல்லும் கும்பல் :
திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை குறி வைத்து திருடும் கும்பல் ஸ்கார்பியோ காரில் வந்து கால்நடைகளை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப்  பெருமாள் கோவில் எதிரில் காக்களூர் செல்லும் ஏரிக்குச் செல்லும் சாலையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கும்பல் ஒன்று அவ்வப்போது திருடி வந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையால் காவல்துறையினர் கெடுபிடி அதிகமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த கால்நடைகளை கடத்தும் திருட்டு கும்பல் ஒன்று தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 23- ஆம் தேதி அனைத்து காவல்துறையினரும் தேர்தல் வேளையில் ஈடுபட்டு ஓய்ந்திருந்த சமயம் பார்த்து இரவில் திருவள்ளூர் ராக்கி திரையரங்கம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை ஸ்கார்பியோ காரில் வந்து இறைச்சிக்காக கடத்திச் சென்றனர்.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்ததை பார்த்த அப்பகுதியில் கால்நடை வளர்த்து வரும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.  மாடு ஒன்றை லாவகமாக ஸ்கார்பியோ காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு சர்வ சாதாரணமாக கடத்திச் சென்றனர்.காரில் வந்த கும்பல் இதை கடத்திச் செல்லப்பட்ட கால்நடைகளுடன் சாலையில் சுற்றித்திரிந்த மற்ற மாடுகள் பரிதாபமாக சாலையில் நின்று வேடிக்கை பார்த்தது கனத்த மனதையும் கரையச் செய்யும் விதத்தில் அமைந்தது.
0Shares