கோவை உலக நன்மை வேண்டி யாகம்

Loading

கோவை
உலக நன்மை வேண்டியும், உலகில் உள்ள அனைவரின் நலனுக்காகவும், செல்வம், ஆரோக்கியம், குடும்ப நலம், குழந்தைகள் வளர்ச்சி, மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தில்  4 நாட்கள் தொடர் யாகம் நடத்த திட்டம்..
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய
மஹா மண்டலேஸ்வரர் சுவாமிகள் பிரபாரானந்தா சரஸ்வதி, மாதாஜி தேவி, ரஞ்சித் பாலாஜி ஆகியோர் கூறியதாவது..
உலக நன்மை வேண்டியும், பாரதத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு கேரள மாநிலம், திருச்சூர், இரிஞ்சாலக்குடா எனும் பகுதியில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் வளாகத்தில், வரும் மே மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம தன்வந்திரி மஹா யாகம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட சந்நியாசிகள், உபாஸகர்கள், மற்றும் 10,000த்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். இந்த யாகம் நடத்த முக்கிய நோக்கமாக, உலக நன்மை அடைய வேண்டும், இப்பூவுலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் இன்புற்று வாழவேண்டும், என்பதை கருத்தில் கொண்டு நடத்த பட உள்ளது என்றனர். மேலும் இத்தகைய தர்ம யுக பிரவேசிகா யாத்திரை, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர். இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றனர். மேலும் இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், உணவுகளும் வழங்க வழி வகை செய்ய பட்டுள்ளது என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares