கோவையில் நடைபெற்ற கோடை வேதாகம வகுப்புகள்

Loading

கோவை
கோவை கேஎன்ஜி புதூர் பிரிவு, பகுதியில்
கர்மேல் ஜெபகோபுரம் எனும் தேவாலயத்தில், கோடை கால சிறப்பு வேதாகம வகுப்புகள் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திறலான குழந்தைகள், குழு, மற்றும் தனிதிறமைகள் வெளிபடுத்தி பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றனர்.
கோவை கேஎன்ஜி புதூர் பிரிவு, பகுதியில்
கர்மேல் ஜெபகோபுரம் எனும் தேவாலயம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதன் போதகராக, ஜோயல் ஆஸ்டீன், எப்சிபா ஜோயல், ஆகியோர் இருந்து வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் கோடை கால விடுமுறை வேதாகம வகுப்புகள் நடத்த படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு, கோடை கால
விடுமுறை வேதாகம வகுப்புகள் நடைபெற்றது. மேலும் இந்த சிறப்பு வகுப்புகள் குறித்து போதகர் ஜோயல் ஆஸ்டீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கர்மேல் ஜெபகோபுரம் எனும் தலைமை தேவாலயம் கோவை சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 31 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கிளை சபையாக கோவை கேஎன்ஜி புதூர் பிரிவு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கி இங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ, மக்கள் சிறப்பு ஜெபங்கள், ஞாயிறு ஆராதனைகளில் கொள்ளுவதாதாகவும் தெரிவித்தார். இன்றைய தினம் விடுமுறை வேதாகம வகுப்பின் கடைசி வகுப்புகள் நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களின் நடனம், குறு நடனம், நடைபெற்றது. தொடர்ந்து குழு, மற்றும் தனிதிறமைகளை வெளிபடுத்திய மாணவ மாணவியர்கள், மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்க பட்டது. இந்த நிகழ்ச்சியில்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில  துணைத்தலைவரும், கவுண்டம் பாளையம் சட்ட மன்ற தொகுதி சிலிண்டர் சின்ன வேட்பாளருமான வழக்கறிஞர் புஸ்பாணந்தம், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன் ராஜா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமாதானம், ராஜி, ரோஸி, நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares