திருவள்ளூரில் 338 மாற்றுத்திறனாளிகளுக்குஸ்கூட்டர்

Loading

திருவள்ளூரில் 338 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் உதவி உபகரணங்கள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு ரூ.1,40,15,190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு கால் அல்லது இரு கால்கள் பாதிக்கப்பட்ட 79 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ஒன்றின் மதிப்பு ரூ.1,01,800 என மொத்தம் ரூ.80,42,200 மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 1 பட்டதாரிக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம், 2 பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் மொத்தம் ரூ.1,00,000  மதிப்பிலும் மற்றும் பார்வையற்றோர், காதுகேளாத 60 மாற்றுத்திறனாளிகளுக்கு  ஸ்மார்ட் போன் ஒன்றின் மதிப்பு ரூ.14,490 என மொத்தம் ரூ.8,69,400/- மதிப்பில் ஆக மொத்தம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மொத்தம் ரூ.90,11,600/-  மதிப்பில் வழங்கப்பட்டது.

மேலும் தனியார் எரிப்பொருள் எண்ணெய் நிறுவன பங்களிப்பு நிதியின் கீழ் Artifical Limbs Manufacturing Corporation of India, ALIMCO Auxiliary production Centre வாயிலாக 196 மாற்றத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், செயற்கை அவையங்கள், ஊன்றுகோல்கள், காதுக்கு பின்னால் அணியும் காதுகருவிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான உபகரணங்கள் என ரூ.50,03,590 மொத்தம் ரூ.1,40,15,190 மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வழங்கப்படுகிறது என்று கூறினார்.

0Shares