மாரியம்மன்திருக்கோயில்திருக்குடநன்னீராட்டுபெருவிழா

Loading

சேலம் மாவட்டம் நாராயணசாமிபுரம் அருள்மிகு “மாரியம்மன் திருக்கோயில்” திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சேலம் மாவட்டம், நாராயணசாமிபுரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு “மாரியம்மன் திருக்கோயில்” புனருத்தாரன அக்ஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா,
ஸ்ரீ விசுவாவசு வருடம் மாசி மாதம் 10ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் அருள்மிகு மாரியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் திருவீதி உலா பவனி வருதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் பெருவிழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மற்றும்  அறங்காவலர் கதிர்வேல், தலைவர் இன்பமணி, செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் ராஜராஜன், பொருளாளர் தீபன் சக்கரவர்த்தி, திருப்பணி குழுவினர்கள் ஸ்ரீநாத், ரஞ்சித் குமார், கார்த்திக் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares