ஈரோடுமகேஷ்”திரியின்றி எரியும் தீபங்கள்”கருத்தரங்கு
![]()
திருவள்ளூர் 5 வது புத்தகத் திருவிழாவில் தொகுப்பாளர் கல்வியாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் “திரியின்றி எரியும் தீபங்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு :
திருவள்ளூர் பிப் 19 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளுர் புத்தகத் திருவிழா-2026 யில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கல்வியாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் “திரியின்றி எரியும் தீபங்கள்” மற்றும் அறந்தாங்கி நிஷா “சிரித்து வாழ வேண்டும்” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026 யில் நிகழ்ச்சி தொகுப்பாளர் – கல்வியாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் அவர்களையும் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யினை திரளான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், தனித் துணை ஆட்சியர் பாலமுருகன், இணை இயக்குநர் (வேளாண்மை) செல்வராஜ், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி, உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் விஜயா, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தாமோதரன், மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

