ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பொதுக்கூட்டம்

Loading

ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பொதுக்கூட்டம்: கம்பம் செல்வேந்திரன் பங்கேற்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்… தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி கம்பம் செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், சின்னையன், செல்ல பொன்னி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் குறிஞ்சி தண்டபாணி, அக்னி சந்துரு, பொ.ராமசந்திரன், வி.சி.நடராஜன், குமாரவடிவேலு, லட்சுமண குமார், முருகேசன் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், கழக மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
0Shares