வேளாண்கல்லூரி மாணவிகள் ஊரக பங்கேற்புமதிப்பீடு

Loading

பெரம்பலூர்

வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக பங்கேற்பு மதிப்பீடு

பெரம்பலூர் ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் ஆத்தூர் வட்டாரத்தில் கந்தசாமி புதூர் கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் கந்தசாமி புதூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பெரம்பலூர் ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள்65 நாட்கள் நடைபெறும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டை நடத்தினர்.இதில் கிராமத்தின் வரைபடம்,கால அட்டவணை, பயிர்கள், மக்கள் தொகை விகிதம், ஊராட்சியின் பரப்பளவு, விவசாயிகள் வகைப்பாடு, நாள் முழுவதும் நிகழும் கிராம மக்களின் செயல்பாடுகளின் நேர அட்டவணை,கிராம பிரச்சனைகள் , கிராமத்தில் உள்ள முக்கிய இடங்கள் போன்றவற்றை வரைபடங்களாக மாணவிகள் வரைந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் கிராமத்தில் உள்ள மக்கள் கலந்து கொண்டனர் மற்றும் ம.சுபஶ்ரீ,
வீ.சுவிக்க்ஷா, கு.சுவாதி,ஞா.சுவிட்டி, சி.ஸ்வேதா, வை.சுவேதா, வி.துளசி, த.வைஷ்ணவி, ரா.ச.வசுந்தரா,
ச.வெனித்தா கலந்து கொண்டனர்.

0Shares