திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் பிப் 16 : தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும், உத்தேச ஒதுக்கீடு மற்றும் திட்ட செயலாக்கத்தின் படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியல் ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் 17.02.2026 அன்று காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே மேற்படி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

