ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா 11ஆவது ஆண்டு விழா

Loading

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா பதின்ம மேல்நிலைப் பள்ளியின் *11ஆவது ஆண்டு விழா* 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலிலுள்ள ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளியின் 11 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் குமரேசன் காரைக்குடி மகரிஷி கல்வி குழுமத்தின் தாளாளர் கல்விஞானி சேதுராமன் காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் சேவற்கொடியோன் கூட்டுத் தலைமை வகித்தனர்.
பள்ளியின் தாளாளர்கள் சேகர் ஸ்டாலின்ரவீந்திரன் லெனின்ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாணவிகளின் வரவேற்பு நடனம் அரங்கேற்றத்துடன் பள்ளியின் செயலாளர் மற்றும் முதல்வர் வீரபாண்டி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவர் குமரேசன் தலைமை உரையாற்றும்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் வேலையில் அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கைக்கும் வழி வகுக்க வேண்டும் என்றும் கல்விஞானி சேதுராமன் கூறும்போது தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு தகுந்த சுதந்திரம் அளித்து முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். சூசையப்பர்பட்டணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ராமச்சந்திரன் ஆண்டிச்சுரணி பங்குத்தந்தை அருள்தந்தை மரிய லூயிஸ் பத்திரப்பதிவு எழுத்தாளர் பக்கீர் முகைதீன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
பள்ளியின் ஓராண்டு சாதனைகள் செயல் அறிக்கையாக காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டது. வகுப்பு வாரியாக கல்வியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் 100% வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு சுழற் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். மாணவர்களின் தனி திறமையை வெளிக்கொணரும் வகையில் வகுப்பு வாரியாக சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு பாடல்களுக்கு மாணவ மாணவிகள் நடனத்தின் மூலம் தங்கள் திறமைகளை வண்ண வண்ண உடைய அணிந்து வருகை புரிந்து இருந்த பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் திளைக்க வைத்தனர். மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது. பள்ளியின் செயலாளர் தெய்வானைஜீவானந்தம் ஆடிட்டர் கண்ணுச்சாமி வாழ்த்துரை வழங்கினர். 100% தேர்ச்சி பெற செய்த ஆசிரியைகளுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சிகளை ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். பள்ளியின் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
0Shares