எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி டிராக்டர் அன்பளிப்பு

Loading

எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம்
சி எஸ் ஆர் திட்டம் மூலம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு 
தூய்மை பணிக்காக ரூ.8 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கினர்
கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் குருடம்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணிக்காக ரூபாய் 8 லட்சம் மதிப்பிளான டிராக்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் செயல்பட்டு வருகிறது எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனத்தின் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் கிரிஷா அறக்கட்டளையுடன் இணைந்து பல்வேறு சமூக பணிகள் மற்றும் நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக குருடம்பாளையம் ஊராட்சியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சி எஸ் ஆர் என்னும் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்பட்டது. இதனை ஊராட்சிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று எமரால்டு நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் இயக்குனர் விஷ்ணு பிரசாத் மற்றும் அறங்காவலர் கருணாகரன் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்கின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், குருடம்பாளையம் ஊராட்சி செயலர் சண்முகராஜ் ஆகியோரிடன் டிராக்ட்டரின் சாவியை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் எமரால்டு நிறுவன நிர்வாகத்தின் சார்பாக தினேஷ்குமார், இரா சக்திவேல், மு ரமேஷ் குமார் மற்றும் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares