ரயில் மறியல் போராட்டத்தில்கம்யூனிஸ்ட்- விசிக கைது

Loading

திருவள்ளூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் விசிக-வினர் கைது :

திருவள்ளூர் பிப் 13 : மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் திருவள்ளூர்  ரயில் நிலையம் அருகே  அனைத்து தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டதலைவர் கஜேந்திரன் தலைமையில் வி.சி.க திருவள்ளூர் மண்டல  செயலாளர் தளபதி சுந்தர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டு ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரயில்  மறியலில்  ஈடுபட முயன்றவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ரயில் நிலைய வளாகத்திலேயே கைது செய்ததால் போக்குவரத்து பாதிப்பு அசம்பாவிதமோ ஏற்படவில்லை.
0Shares