போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது
![]()
திருவள்ளூரில் 2 வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர் :
திருவள்ளூர் பிப் 12 : திருவள்ளூர் உழவர் சந்தை அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மாநிலங்களில் வழங்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று கோஷங்கள் முழங்க சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவில் ரூ. 6,000, 10,000, 15,000-ம், மாற்றுத்திறனாளிகளுக்காண உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தெலுங்கானாவில் ரூபாய் நான்காயிரம் புதுச்சேரியில் நான்காயிரம் முதல் 5700 வரையும் திரிபுராவில் 5000-ம் அரியானாவில் 3500 மற்றும் டெல்லியில் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 1500 , மற்றும் 2000 மட்டுமே வழங்கப்படுகிறது .
வறுமையில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மாநிலங்களில் வழங்குவதை போல் மாத உதவித் தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

