அங்கன்வாடிபணியாளர்கள்தொடர்காத்திருப்புபோராட்டம்  

Loading

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் : 
திருவள்ளூர் பிப் 11 : காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் காலமறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை  உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையினான  ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டு பணி முடிந்து தகுதியான சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியில் அமர்த்திட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு அகவிலைப்படி காப்பீடு  வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த ஒரு வாரமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில்  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு ஏன் மாநில நிர்வாகிகளை அழைத்துப்பேசவில்லை என்றும், அங்கன்வாடி, சத்துணவு திட்டத்தில் 2 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் உள்ள நிலையில் எங்கள் வாக்கு தேவையென்றால் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
பெண்கள் யாரும் கேட்காத இலவச பேருந்து பயண திட்டம், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக பெண்களுக்கு உதவி செய்யும் அரசு உழைக்கும் எங்களை ஏன் வஞ்சிக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர். மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி உரிய தீர்வு எட்டும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர்.
0Shares