விவசாயிகள் பாதுகாப்புசங்கம் ஆளுநரை சந்தித்துமனு

Loading

கடலூர்

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக ஆளுநரை சந்தித்து மனு

கடலூர் மாவட்டத்தில் 220 இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசின் நிதியில் நேரடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு ஆண்டுக்கு 4.5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யும் வேலையில் சிப்பத்திற்கு 60/ரூபாய் வீதம் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்  ஜாதி அமைப்பினர் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் அலுவலர்கள் சேர்ந்து வசூல் வேட்டை ஆண்டுக்கு சுமார் 90 கோடி ரூபாய் போல இழப்பை ஏற்படுத்துகின்றனர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே நமது கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்து மத்திய ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது

தலைமை கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு  சங்கத்தின் தலைவர் சாத்துக்கூடல் ஜி சக்திவேல் வரவேற்புரை கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பரவலூர் ஆர். பாலகிருஷ்ணன் தீர்மானம் வாசிப்பு ஜெயபால் வேல்முருகன் ராஜேந்திரன் மற்றும் சிவராமன் நன்றி உரை கடலூர் மாவட்ட பாரம்பரிய விவசாய சங்கத்தின் பொருளாளர் டிவி புத்தூர் முத்துஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0Shares