சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை.. மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது, திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, பிடிஎம்எஸ் பஞ்சாலை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும் வட்ட பிரதிநிதியுமான சுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.