பன்னிரண்டாம் வகுப்புமாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
![]()
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து பள்ளி வகுப்பினை பார்வையிட்டார் :
திருவள்ளூர் ஜன 27 : திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம் சி.எஸ்.ஐ.கௌடி டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து பள்ளி வகுப்பினை பார்வையிட்டார்.
மாவட்டத்தில் மொத்தம் பள்ளி கல்வித் துறை சார்பில் எட்டு மையங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் 10.01.2026 முதல் 28.02.2025 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில் 1600 மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மதிய உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

