(03.01.2026) (04.01.2026) ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம், 108 உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்று வந்த சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள். நேரில் பார்வையிட்டார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளுக்கு பின் கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே 27.12.2025 அன்று மற்றும் 28.12.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (03.01.2026) மற்றும் நாளை (04.01.2026) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 736 வாக்குச்சாவடி மையங்களிலும் (03.01.2026) மற்றும் நாளை (04.01.2026) ஆகிய இரண்டு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம், 108 உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஏதுவாக நடைபெற்று வந்த சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள் நேரில் பார்வையிட்டு, படிவம் – 6 மற்றும் படிவம் 8 வழங்கியோர்களின் விவரங்களை கேட்டறிந்து, மேப்பிங் செய்ய இயலாத நபர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா எனவும்,
நாளைய தினமும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பினை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதகை வருவாய் கோட்டாட்சியர் / வாக்காளர் பதிவு அலுவலர் தி
டினு அரவிந்த், நகராட்சி ஆணையர் கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

