வெண்மனம்புதூரில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து

Loading

திருவள்ளூர் அடுத்த வெண்மனம்புதூரில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு :

திருவள்ளூர் ஜன 03 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெண்மனம்புதூர் தனலட்சுமி நகரில் வசித்து வருபவர் நரசிம்மன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி ஹேமாவதி (47) என்பவர் நாளை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் வெண்மனம்புதூரில் உள்ள சிவன் கோவிலுக்கு களி செய்வதற்காக வீட்டு வராண்டா பகுதியில் இரும்பு ஸ்டவ் அடுப்பு அருகில் எரிவாய் சிலிண்டரை வைத்து அரிசியை வறுத்துள்ளார். அப்போது இரும்பு அடுப்பில் இருந்து வெளியான தீ ஜுவாலைப்பட்டு சிலிண்டர் பைப் தீப்பிடித்து எளிய தொடங்கியது.

இது குறித்து உடனடியாக திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமாவதி மற்றும் அவரது மகன் ஜெயபிரகாஷ் ஆகியோர் சாதுர்யமாக செயல்பட்டு பெட்ஷீட்டை தண்ணீரில் நனைத்து எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது போட்டு கட்டுப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள கடையிலிருந்து தீயணைப்பாணி கொண்டு வந்து தீ மேலும் பரவாமல் முற்றிலுமாக அனைத்து உள்ளனர். இருப்பினும் விரைந்து வந்த தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில்  தீயணைப்பு அலுவலர்கள் நேவிஸ், குமரகுரு, பிரகாஷ் கார்த்திக், விஜய் ஆகிய தீயணைப்புத் துறையினர் எரிவாயு சிலிண்டரை வீட்டு வெளியே கொண்டு வந்து எரிவாயுவை முற்றிலும் வெளியேற்றினர்.
சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தாலும்,  இரும்பு அடுப்பு அருகில் எரிவாயு சிலிண்டரை வைத்து சமையல் செய்தது தவறு என்றும், வீட்டிற்குள் சமையல் செய்யும்போது இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும் , வராண்டாவில் வைத்து சமையல் செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். நேற்று விருகம்பாக்கத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு டிவியை ஆன் செய்தபோது ஏற்பட்ட அழுத்தத்தால் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
0Shares