ஆலை பண்னையில் புதியரக கரும்பு பயிர்களை ஆய்வு
![]()
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு சர்க்கரை கழகம்) த.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும், ஆலை பண்னையில் புதிய ரக கரும்பு பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைப் பதிவாளரும் செயலாட்சியருமான அ.மீனா அருள், தலைமை பொறியாளர் (சர்க்கரை கழகம்) எஸ்.சக்திவேல், தலைமை ராசயினர் (சர்க்கரை கழகம்) சி.கே.செந்தில் குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

