கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பால பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் வைத்து துவக்கி வைத்தனர் :
திருவள்ளூர் ஜன 01 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் ஊராட்சி கசவநல்லாத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.17.20 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் துவக்கி வைத்து பொதுமக்களிடம் உரையாற்றினர்.அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளின் சார்பில் மக்களுக்கு புதிய பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் 63,000 பட்டாக்கள் பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 37,000 க்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கினார். ஆக மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1 இலட்சம் பட்டாக்கள் மேல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 உயிர் மட்ட மேம்பாலப் பணிகள் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஆணையிடப்பட்டு இன்று தண்டலம் ஊராட்சி கசவநல்லாத்தூர் கிராமத்தில் ரூ.17.20 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலப் பணிகள் துவங்கப்பட்டது. மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். அதன்படி ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை ,ஓய்வூதியம் போன்றவற்றை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்று இடங்களில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொகுதி மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநரும் திட்ட இயக்குநருமான வை.ஜெயகுமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாசலம், காஞ்சிப்பாடி சரவணன், பொன் பாண்டி, பூண்டி ஒன்றிய செயலாளர் மோதிலால், கூளூர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் கொண்டஞ்சேரி ரமேஷ், செஞ்சி பிரகாஷ், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.