சிறப்புதீவிரதிருத்தம்2026 SIRபணிஆலோசனைக்கூட்டம்
![]()
தேனி மாவட்டம்
சிறப்பு தீவிரத் திருத்த (SIR 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.விஜய் நெஹ்ரா, இ.ஆ.ப., அவர்கள் (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்று வரும் இது தொடர்பான பணிகளை ஆய்வு செய்வதற்கும், களப்பணிகள் மேற்கொள்ளவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தேனி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக திரு.விஜய் நெஹ்ரா, இ.ஆ.ப., இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி அவர்களை நியமனம் செய்துள்ளது. அதன்படி, (14.12.2025) இன்றுதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்;டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.விஜய் நெஹ்ரா, இ.ஆ.ப., (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் தகவல்களை சரிபார்த்து ஏதேனும் வாக்காளர்கள் விடுபட்டிருந்தால், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என எடுத்துரைத்தார்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலானது வருகின்ற 19.12.2025-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேற்கண்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலம் சரிபார்த்து கொள்ளுமாறும், மேற்கண்டவாறு வெளியிடப்படவுள்ள பட்டியலுக்கான உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகளானது 19.12.2025-ஆம் தேதி முதல் 18.01.2026-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காலங்களில் வரைவு வாக்களர் பட்டியலில் விடுபட்டோர் மற்றும் புதியதாக சேர்க்க வேண்டிய வாக்காளர்கள் இருப்பின் படிவம் 6 வழங்கலாம் என வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் பணிகளை நல்ல முறையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி செய்திடுமாறு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.விஜய் நெஹ்ரா, இ.ஆ.ப., அவர்கள் (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளில் களப்பணி மேற்கொண்டு, வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய படிவங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.த.முத்துமாதவன், வட்டாட்சியர்கள் திரு.சுருளி (தேர்தல்), திரு.சதிஸ்குமார்(தேனி), திரு.ஜாகிர் உசேன் (ஆண்டிபட்டி) உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

