மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

Loading

திருவள்ளூரில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் :
திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான ஆயத்த பணிகளில் ஒன்றான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மு.பிரதாப் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது :
தேர்தல் 2026 காண தயாரிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது முதலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கி இன்றுடன் வழங்குவதற்கான கடைசி நாள். இன்று  இப்பணிகள் முடிந்ததற்கு பிறகு மறுசீரமைத்தல் பணிகள் முடிவுற்ற பிறகு 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து வெளியிட போகிறோம். அதற்கு பிறகு பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் இரண்டு மாதம் நடைப்பெற்று முடிந்த பின்னர் பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிடப்படும்.
பொது தேர்தலுக்காக வாக்குபதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணி அடுத்த பணி மிக முக்கியமான பணி ஆகும். அதற்கு முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். முதல் நிலை சரிபார்ப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இப்பொழுது தான் இயந்திரங்கள் செயல்பாடு குறித்து பெல் பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள்.  அடுத்த பொது தேர்தலுக்கு அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தும் பணிகள் நடைபெறும். இப்பணியை திருவள்ளூர் மாவட்ட10 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து நடைபெறும்.
வாக்குப்பதிவு இயந்திரம் 8914 இயந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட் எனப்படும் வாக்கு பதிவு செய்யும் 6614 இயந்திரங்களும்,  வாக்காளர் சரிபார்க்குத் காகித தணிக்கை சோதனை (விவிபிஎடி) எனப்படும் இயந்திரம் 6273 மொத்தமாக 21,801 இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி இருக்கிறது. இது ஏறக்குறைய 25-30 நாட்கள் நடைபெற உள்ளது.  பெங்களூர்  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து 13 பொறியாளர்கள் வந்திருக்கிறார்கள்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்ட 2 நபர்கள் இப்பணிகளை  பார்வையிடுவார்கள்.  இப்பணியின் போது கைப்பேசி. எவ்வித மின்னனு பொருட்களும் எடுத்து வர அனுமதியில்லை. இப்பணி மிகவும் பாதுகாப்பாக நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படும்.  சரிபார்க்கப்பட்ட இயந்திரங்ளின் எண்ணிக்கை அன்று மாலை செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் இயந்திரங்களின் கோளாறுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டு புது இயந்திரங்கள் பெறப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 35,82,226 ஆகும். இதில் 3582032 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் 194 படிவங்கள் மட்டும் விநியோகிக்கப்படவில்லை. பெரும்பான்மையான படிவங்கள் திரும்பவந்ததற்கான காரணங்கள் இறப்பு, வீடுகளை நிரந்தரமாக காலி செய்தல் இந்த இடங்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள்  3 முறை நேரில் சென்றும் தகவல்களை பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தகவல்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது வழங்கப்படும் என கூறினார்.இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டி.ஸ்ரீராம், பெல் நிறுவன பொறியாளர்கள். பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares