உப்பளம்அரசுஊழியர்குடியிருப்பு மேம்பாட்டு பூமிபூஜை
![]()
புதுச்சேரி டிச-12
புதுச்சேரி உப்பளம் அரசு ஊழியர் குடியிருப்பு மேம்பாட்டு பணி பூமி பூஜை அனிபால் கென்னடி எம்எல்ஏ பங்கேற்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட உழந்தை பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் அரசு ஊழியர் குடியிருப்பில் AG-Block வகை–1 வீடமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.46.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமிப்பூஜை இன்று (11.12.2025) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் K.வீரசெல்வம், கட்டடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்டம் செயற்பொறியாளர் E.சீனிவாசன், முன்னாள் உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலைப் பொறியாளர் S.ராமன், ஒப்பந்ததாரர் M.சதிஷ் , கிளை செயலாளர் சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், அரசு ஊழியர் குடியிருப்பின் வசதியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

