ஓய்வூதியர்கள் நல அமைப்புகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Loading

சேலம்
தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் குமார் தலைமை தாங்கினார், கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சடையப்பன் துவக்கி வைத்தார்.
இதில், ஆந்திர அரசு வழங்குவது போன்று பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியர் அனைவருக்கும் ஓய்வூதிய பண பலன்கள் மற்றும் ஓய்வூதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும், பணிவரன் முறை செய்யப்பட்ட NMR ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அனுமதித்து அரசாணை வழங்கிட வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சேமநல நிதி காலம் தாழ்த்தியும் சேலம் மாநகராட்சியில் 2016-17 PF வட்டியும் வழங்கப்படவில்லை, ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். நிரந்தர பணியிடம் இல்லாமல் மாற்றி அரசாணை எண்: 139, 152, 10 ரத்து செய்து அவுட்சோர்சிங் ஒப்பந்த நடைமுறைகளை கைவிட வேண்டும் போன்ற 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பு குழு பாஸ்கரன், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் கலையரசன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முருகப்பெருமாள், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளர்கள் நேதாஜி, சுபாஷ், ராஜ்குமார், சுரேஷ், மாவட்டத் தலைவர் அருள்மொழி, மாவட்ட அமைப்பு குழு புஷ்பகாந்தன் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் நல அமைப்பினர் கலந்து கொண்டனர்.
0Shares