நீலகிரிஆட்சியர் மனித உரிமைகள் தின உறுதிமொழி
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு , அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
இந்த உறுதிமொழியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.
எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளைப் மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடைமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம் சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதறற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார்கள் லோகநாயகி (பொது). கண்ணன் (கணக்குகள்), வாணி (வளர்ச்சி) உட்பட அரசுத்துறை அலுவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

