மழைநீருடன்கழிவுநீர்கலந்துபிரதானசாலையில்தேக்கம்

Loading

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து தொழிற்சாலைக்கு செல்லும் பிரதான சாலையில் முழங்கால் அளவிற்கு நிரந்தரமாக தேங்கி நிற்பதால் பெண் தொழிலாளர்கள் அவதி : 

திருவள்ளூர் டிச 07 : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதால் தொழிலாளர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பேஸ் -2 பகுதியில் 28 -க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலைகளில் ஆண்கள், பெண்கள் என 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் அந்த பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தொழிற்சாலைக்கு செல்லும் பிரதான சாலையில் குளம்போல் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. இதனால் தொழிற்சாலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் முழங்கால் அளவிற்கு மேல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெண் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த கழிவுநீரில் நடந்து வேலைக்கு செல்வதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி கழிவு நீர் முறையாக செல்ல நடவடிக்கை மேற்கொள்வதோடு சாலையையும் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தம் நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares