பாப்பநாயக்கன்பாளையம்ஸ்ரீரங்கம்மாள்கும்பாபிஷேம்

Loading

கோவை
பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ரங்கம்மாள் ஆலயம் 
மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
கோவை தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ரங்கம்மாள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் யாக சாலை பூஜைகள் நடைபெற்று விமானக்கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கவரா நாயுடு, புஜபுல்ல குலம் மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ரங்கம்மாள் ஆலயம். இந்த ஆலயம் தற்போது புரணமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சனிக்கிழமை காலை யாகசாலையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், கோ பூஜை, ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹதி, தீபாரதனை நடைபெற்றது. மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார் பணம், காப்பு அணிவித்தல், தீருத்சங்கீரஹணம், கலாகர்சனம், யாகசாலை மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, விசேஷ ஹோமங்கள், அன்னஹதி திரவியா ஹிதி, முதல் காலம் மஹா பூர்ணாஹீதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு கோபுர கலசம், பத்திர ஸ்தாபனம் செய்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால பூஜை தொடங்கி மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, ஷன்னவதி, திரவியாஹீதி, மகா பூர்ணஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்ரீதி நடைபெற்றது. இன்று புனித நீர் கும்பங்கள் யாக சாலையிலிருந்து புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ ரங்கம்மாள் மூலவர் மற்றும் பரிவார விநாயகர், கன்னிமார் மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேக தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், மகா திரிசதி, அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது.
யாகங்கள் மற்றும் கும்பாபிஷேகத்தை வடவள்ளி ஸ்ரீ சிவயாக்செம்மல், சிவ ஸ்ரீ சிவ சங்கர் சிவாசார்யார் குழுவினர் நடத்திவைத்தனர். இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
0Shares