வீடு வீடாக சென்று திரும்ப பெறுவதுஎன முடிவு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் கணக் கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வீடு வீடாக சென்று திரும்ப பெறுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் ஆய்வு :
திருவள்ளூர் டிச 01 : திருவள்ளூர் மாவட்டம், மற்றும் வட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு,திருமழிசை வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வீடு வீடாக சென்று திரும்ப பெறுவது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சென்னை பெருநகர மாநகராட்சி,வளசரவாக்கம் மண்டலம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வீடு வீடாக சென்று திரும்ப பெறுவது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இதில் உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், வாக்காளர் பதிவு அலுவலரும் உதவி ஆணையருமான (கலால்) கணேசன்,உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் பூந்தமல்லி வட்டாட்சியருமான உதயம், வாக்காளர் பதிவு அலுவலரும் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியருமான எம்.சதீஷ் குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் மதுரவாயல் வட்டாட்சியருமான ஜி.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

