காக்களூர்ஊராட்சி& செவ்வாப்பேட்டைமகாலட்சுமிநகர்
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், மற்றும் வட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்களூர் ஊராட்சி மற்றும் செவ்வாப்பேட்டை மகாலட்சுமி நகர் பகுதியில் விநியோகிக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வீடு வீடாக சென்று திரும்ப பெறுவது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.எஸ்.யுவராஜ், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பாலாஜி (திருவள்ளூர்), தனி வட்டாட்சியர் (சபாதி) விஜயகுமாரி,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

