திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் விருப்ப மனு :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஆகியோர் விருப்ப மனு படிவங்களை பார்வையாளரிடம் வழங்கினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் ராகுல் காந்தி வழிகாட்டுதலோடு நாடு முழுவதும் காங்கிரஸ் பேரியக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டந்தோறும் மாவட்ட தலைவர்களை நியமனம் செய்வதில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
அதற்கான திருவள்ளூர் தனியார் அரங்கில் மாவட்ட தலைவர் குறித்த கருத்துக்களை கேட்டறிவதற்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான பி.எம்.சந்தீப், மாநில செயலாளர் ஏஜிஏ கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கோவி.சிற்றரசு, வி.பி.அண்ணாமலை மற்றும் மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் கட்சியை எந்த வகையில் பலப்படுத்தலாம். அதேபோல், தகுதியான மாவட்ட தலைவரை தேர்வு செய்வது தொடர்பாகவும் கட்சியினரிடம் கேட்டறிந்தனர்.
அப்போது, நிர்வாகிகள் கோஷ்டியாக இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அதனால், அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மாவட்டத் தலைவர்களின் செயல்பாடும் இருப்பதும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மற்றும் ஆவடி மாநகர தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு படிவங்களையும் பார்வையாளரிடம் வழங்கினர்.
அதேபோல், அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரையில் படிவங்கள் பெறப்பட உள்ளதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.அப்போது, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலவைவர் ஏ.ஜி.சிதம்பரம், நிர்வாகிகள் சசிகுமார், கலீல், திவாகர், அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.