துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்48வது பிறந்தநாள்

Loading

கோவை
கோவை வடக்கு மாவட்டம், துடியலூர் மேற்கு பகுதி சார்பாக
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு
பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர்
கோவை வடக்கு மாவட்டம், துடியலூர் மேற்கு பகுதி சார்பாக தி மு க இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட கே என் ஜி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை தி மு க தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், துடியலூர் மேற்கு பகுதி சார்பாக கோவை மாநகராட்சி 15 வது வார்டிற்கு உட்பட்ட கே என் ஜி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுதி கழக செயலாளர் ப ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டக் கழக செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர் இரா கற்பகம் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் பகுதி கழக நிர்வாகிகள்  பழனிச்சாமி,  கோவை சம்பத்,  ராக்கிமுத்து,  கண்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் சங்கீதபிரியா,  ஆல்வின்மேரி,  விஜயா, அனிதா,  ராஜாமணி,  வட்டக் கழக நிர்வாகிகள்  ஜெயகுமார்,   ராஜன் என்கிற மாதேஸ்வாமி,   பிரகாஷ்,  தமிழழகன்,  ஆறுமுகம்,  முத்துச்சாமி,  துரைசாமி, ஆறுச்சாமி, சத்யா,   முருகதாஸ், இளைஞர் அணி சுரேஷ்,  ஸ்ரீஹரி,   ராகுல்,  அபுதாகிர்,  தீபக்,  ஷாகுல், மாணவரணி  சிவதர்ஷன்,   எட்வின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares